NEWS & INSIGHTS
அணு மருந்து
பித்தநீர் ஸ்கேன்: முன்பதிவுக்கு 4 மணிநேரம் முன்பு எதுவும் சாப்பிடவோ அல்லது அருந்தவோ கூடாது.
எலும்பு ஸ்கேன்: உங்களுக்கு ஒரு ஊசி போடப்படும். ஊசி போட்ட பின்பு, நீங்கள் அடுத்த முன் பதிவு நாள் அன்று வந்தால் போதும். அடிக்கடி 3-4 கிளாஸ் தண்ணீர் அருந்தி, சிறுநீர் கழிக்குமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்படும். படங்களுக்காக நீங்கள் இரண்டாவது முன்பதிவுக்கு வரவேண்டும். ஆரம்ப ஊசி: 20நிமி|அதன்பின்பு படங்கள்:2 மணிநேரங்கள்
மூளை மேற்பரவல் இமேஜிங்: பரிசோதனை நாளன்று காபின் கொண்ட பானங்கள் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்கவும்.
கேலியம் ஸ்கேன்: சிறிய, பாதுகாப்பான அளவிலான கதிரியக்கப் பொருளான கேலியம் ஊசி போடப்படும். ஊசி போட்ட பின்பு, 6 மணிநேரம் முதல் 48 மணிநேரம் வரையிலான அடுத்த முன்பதிவு வருகைக்கு வந்தால் போதும். திரும்பி வந்த பின்பு, ரேடியோடிரேசர் உடலில் எங்கு சேர்ந்துள்ளது என்பதைக் கண்டறிவதற்காக, ஒரு ஸ்கேனர் கொண்டு படங்கள் எடுக்கப்படும்.
சிறுநீரக ஸ்கேன்கள்:
- சிறுநீரகச் செயல்பாட்டு ஸ்கேன்: முன்பதிவுக்கு 1 மணிநேரம் முன்பு 2 கப் தண்ணீர் அருந்தவும். அனைத்து தற்போதைய இரத்த அழுத்தம் தொடர்பான மருத்துவ விவரங்களை எடுத்து வரவும்.
- சிறுநீரக கேப்டோப்ரில் ஸ்கேன்: பரிசோதனைக்கு 1 மணிநேரம் முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது. 4 கிளாஸ்கள் திரவங்கள் அருந்தவும் (பரிசோதனைக்கு 4 மணிநேரம் முன்பு ஒவ்வொரு மணிநேரமும் தண்ணீர்/ஜூஸ் அருந்தவும்). நீங்கள் சிறுநீர் கழிக்கலாம். அனைத்து தற்போதைய மருந்துகளின் ஒரு பட்டியலை எடுத்து வரவும். பதிவு சமயத்தின் போது, ஏஸ் தடுப்பிகள், சிறுநீரிறக்கிகள் மற்றும் பிற உயர் இரத்த அழுத்த மருந்துகளைத் இடைநிறுத்துவது தொடர்பாக நோயாளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
தைராய்டு அப்டேக் அண்ட் ஸ்கேன்: தைராய்டு மருந்துகள் (உதாரணத்திற்கு, எல்ட்ரோக்ஸின், சிந்த்ராய்டு, தைராக்ஸின்) அல்லது அயோடின் அடங்கிய உணவுகள் (உதாரணத்திற்கு, கெல்ப் அல்லது கடற்பாசி) இந்தப் பரிசோதனையின் முடிவுகளைப் பாதிக்கக் கூடும். எந்தவித தைராய்டு மருந்துகளையும் நீங்கள் எடுத்து வந்தால், பதிவு செய்யும் போது ஊழியரிடம் தகவலளிக்கவும். தைராய்டு மருந்துகள் அல்லது சப்ளிமென்ட்களை எடுப்பதை இடைநிறுத்துவது குறித்து உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசனை செய்யுங்கள் (3 வாரங்களுக்கு முன்பு நிறுத்தப்படவேண்டும்). உங்களின் அனைத்து தற்போதைய மருந்துகளின் ஒரு பட்டியலை எடுத்து வரவும். தைராய்டு அப்டேக் அண்ட் ஸ்கேன் 2 நாட்கள் மேற்கொள்ளப்படும்.
தைராய்டு அப்டேக் அண்ட் ஸ்கேன் 2 நாட்களுக்கு மேல் செய்யப்படுகிறது:
நாள் 1: வாய்வழியாக ஒரு கேப்ஸ்யூல் உட்கொள்ளப்பட்டு, அளவீடுகள் எடுக்கப்படும் (1 மணிநேரம் வரை ஆகலாம்).
நாள் 2: அப்டேக் அளவீடு எடுக்கப்பட்ட 24 மணிநேரம் கழித்து, ஓர் ஊசியும் அதனைத் தொடர்ந்து இமேஜிங் நடைமுறையும் மேற்கொள்ளப்படும் (1 மணிநேரம் வரை ஆகலாம்).