ஸ்கேன்

  • நீங்கள் உங்களுக்கு ஸ்கேன் செய்வதற்கு முன் தினம் மாலையில் இருந்து சர்க்கரை கலந்த பானங்களையோ தின்பண்டங்களையோ, அதாவது, ஜூஸ், சோடா, அரிசி, பாஸ்தா, ஒயிட் பிரட் (ரொட்டி) அல்லது வேகவைக்கப்பட்ட பேக்கரி பண்டங்களை சாப்பிடாதீர்கள். ஸ்கேன் செய்வதற்கு முன் தினம் வரை, அதிக புரதம் உள்ள உணவுகளான, முந்திரி, பாதாம் போன்ற கொட்டை வகைகள், விதைகள், மாமிசம், கோழி போன்ற பண்ணை பறவைகள், மீன், முட்டைகள், பாலாடைக்கட்டிகள், பீன்ஸ் மற்றும் காய்கறிகளை தேர்வு செய்து சாப்பிடுங்கள்.
  • வைட்டமின்கள், சப்ளிமென்ட்டுகள் மற்றும் கஃபைன் உள்ள காபி போன்ற பொருட்களை உங்களுக்கு ஸ்கேன் செய்யும் நாளுக்கு முன் தினம் மாலையிலிருந்து சாப்பிடாதீர்கள். கஃபைன் இல்லாத மற்ற உங்களது வழக்கமான மருந்துகளை உட்கொள்ளுங்கள்.
  • ஸ்கேன் செய்வதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பிருந்து உடற்பயிற்சி செய்யாதீர்கள். உங்கள் உடல் இயக்க நடவடிக்கைகளை ஸ்கேன் செய்வதற்கு முன் தினம் முழுவதும் குறைத்துக் கொள்ளுங்கள்.
  • ஸ்கேன் செய்வதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பிருந்து தண்ணீர் தவிர வேறு எதையும் சாப்பிடவோ பருகவோ செய்யாதீர்கள்.
  • தளர்வான வசதியான உடைகளை, உலோகத்தினால் ஆன பட்டன்கள், ஜிப்புகள் இல்லாத உடைகளை அணியுங்கள்.

அணு மருந்து

பித்தநீர் ஸ்கேன்: முன்பதிவுக்கு 4 மணிநேரம் முன்பு எதுவும் சாப்பிடவோ அல்லது அருந்தவோ கூடாது.

எலும்பு ஸ்கேன்: உங்களுக்கு ஒரு ஊசி போடப்படும். ஊசி போட்ட பின்பு, நீங்கள் அடுத்த முன் பதிவு நாள் அன்று வந்தால் போதும். அடிக்கடி 3-4 கிளாஸ் தண்ணீர் அருந்தி, சிறுநீர் கழிக்குமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்படும். படங்களுக்காக நீங்கள் இரண்டாவது முன்பதிவுக்கு வரவேண்டும். ஆரம்ப ஊசி: 20நிமி|அதன்பின்பு படங்கள்:2 மணிநேரங்கள் 

மூளை மேற்பரவல் இமேஜிங்: பரிசோதனை நாளன்று காபின் கொண்ட பானங்கள் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்கவும். 

கேலியம் ஸ்கேன்: சிறிய, பாதுகாப்பான அளவிலான கதிரியக்கப் பொருளான கேலியம் ஊசி போடப்படும். ஊசி போட்ட பின்பு, 6 மணிநேரம் முதல் 48 மணிநேரம் வரையிலான அடுத்த முன்பதிவு வருகைக்கு வந்தால் போதும். திரும்பி வந்த பின்பு, ரேடியோடிரேசர் உடலில் எங்கு சேர்ந்துள்ளது என்பதைக் கண்டறிவதற்காக, ஒரு ஸ்கேனர் கொண்டு படங்கள் எடுக்கப்படும். 

சிறுநீரக ஸ்கேன்கள்: 

  • சிறுநீரகச் செயல்பாட்டு ஸ்கேன்: முன்பதிவுக்கு 1 மணிநேரம் முன்பு 2 கப் தண்ணீர் அருந்தவும். அனைத்து தற்போதைய இரத்த அழுத்தம் தொடர்பான மருத்துவ விவரங்களை எடுத்து வரவும்.
  • சிறுநீரக கேப்டோப்ரில் ஸ்கேன்: பரிசோதனைக்கு 1 மணிநேரம் முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது. 4 கிளாஸ்கள் திரவங்கள் அருந்தவும் (பரிசோதனைக்கு 4 மணிநேரம் முன்பு ஒவ்வொரு மணிநேரமும் தண்ணீர்/ஜூஸ் அருந்தவும்). நீங்கள் சிறுநீர் கழிக்கலாம். அனைத்து தற்போதைய மருந்துகளின் ஒரு பட்டியலை எடுத்து வரவும். பதிவு சமயத்தின் போது, ஏஸ் தடுப்பிகள், சிறுநீரிறக்கிகள் மற்றும் பிற உயர் இரத்த அழுத்த மருந்துகளைத் இடைநிறுத்துவது தொடர்பாக நோயாளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

தைராய்டு அப்டேக் அண்ட் ஸ்கேன்: தைராய்டு மருந்துகள் (உதாரணத்திற்கு, எல்ட்ரோக்ஸின், சிந்த்ராய்டு, தைராக்ஸின்) அல்லது அயோடின் அடங்கிய உணவுகள் (உதாரணத்திற்கு, கெல்ப் அல்லது கடற்பாசி) இந்தப் பரிசோதனையின் முடிவுகளைப் பாதிக்கக் கூடும். எந்தவித தைராய்டு மருந்துகளையும் நீங்கள் எடுத்து வந்தால், பதிவு செய்யும் போது ஊழியரிடம் தகவலளிக்கவும். தைராய்டு மருந்துகள் அல்லது சப்ளிமென்ட்களை எடுப்பதை இடைநிறுத்துவது குறித்து உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசனை செய்யுங்கள் (3 வாரங்களுக்கு முன்பு நிறுத்தப்படவேண்டும்). உங்களின் அனைத்து தற்போதைய மருந்துகளின் ஒரு பட்டியலை எடுத்து வரவும். தைராய்டு அப்டேக் அண்ட் ஸ்கேன் 2 நாட்கள் மேற்கொள்ளப்படும்.

தைராய்டு அப்டேக் அண்ட் ஸ்கேன் 2 நாட்களுக்கு மேல் செய்யப்படுகிறது:

நாள் 1: வாய்வழியாக ஒரு கேப்ஸ்யூல் உட்கொள்ளப்பட்டு, அளவீடுகள் எடுக்கப்படும் (1 மணிநேரம் வரை ஆகலாம்).

நாள் 2: அப்டேக் அளவீடு எடுக்கப்பட்ட 24 மணிநேரம் கழித்து, ஓர் ஊசியும் அதனைத் தொடர்ந்து இமேஜிங் நடைமுறையும் மேற்கொள்ளப்படும் (1 மணிநேரம் வரை ஆகலாம்).

அல்ட்ராசவுண்ட்

அடிவயிறு: முன்பதிவுக்கு 8 மணிநேரங்கள் முன்பு எதுவும் சாப்பிடவோ அருந்தவோ (புகைப் பிடித்தல் அல்லது சூயிங் கம் மெல்லுதல்) கூடாது.

அடிவயிறு/இடுப்பு: முன்பதிவுக்கு 1 மணிநேரம் முன்பு 34 அவுன்ஸ் அல்லது  1 லிட்டர் தண்ணீர் அருந்துவதைத் தவிர, முன்பதிவுக்கு 8 மணிநேரங்கள் முன்பு எதுவும் சாப்பிடவோ அருந்தவோ கூடாது.  பரிசோதனைக்கு முன்பு சிறுநீர் கழிக்கக் கூடாது.

மகப்பேறியல்/இடுப்பு: முன்பதிவுக்கு 1 மணிநேரம் முன்பு 34 அவுன்ஸ் அல்லது 1 லிட்டர் தண்ணீர் அருந்தவும். பரிசோதனைக்கு முன்பு சிறுநீர் கழிக்கக் கூடாது.

புராஸ்டேட் (டிரான்ஸ்ரெக்டல்) பரிசோதனைக்கு 2 மணிநேரம் முன்பு ஃப்ளீட் எனிமாவை எடுக்கவும் (உங்கள் மருந்துக் கடையில் இதனை வாங்கிக் கொள்ளலாம்). முன்பதிவுக்கு 1 மணிநேரம் முன்பு 34 அவுன்ஸ் அல்லது 1 லிட்டர் தண்ணீர் அருந்தவும்.

மற்ற பரிசோதனைகள்: பின்வரும் பரிசோதனைகளுக்கு முன்தயாரிப்பு எதுவும் தேவையில்லை: தைராய்டு, மார்பகம், விதைப்பை, எக்ஸ்ட்ரீமிட்டி மற்றும் வாஸ்குலார் அல்ட்ராசவுண்ட்.

எலும்புத் தாது அடர்த்தி

பரிசோதனைக்கு 24 மணிநேரங்கள் முன்பு கால்சியம்/வைட்டமின் சப்ளிமென்ட்டுகளை எடுக்கக் கூடாது. பரிசோதனையின் 2 வாரங்களுக்கு முன்பு உங்களுக்கு அணு மருத்துவ சாய ஊசி அல்லது பேரியம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தால், உங்கள்  பரிசோதனையை வேறு ஒரு நாளுக்கு மாற்றியமைக்கவும். ஜிப் அல்லது உலோக இணைப்புகள் இல்லாத உடைகளை அணிந்து வருமாறு நோயாளிகள் கேட்டுக்கொள்ளப்படுவர்.

மேமோகிராபி

முன்பதிவுக்கு வரும்போது டியோடரண்ட், பவுடர் மற்றும் வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. ஸ்கர்ட் அல்லது பேண்டுடன், மேல்சட்டை அணிந்து வரவும்.

நியூக்ளியர் கார்டியாலஜி

  1. நோயாளி குறைந்த அளவிலான சிற்றுண்டி/ மதிய உணவை எடுத்துக் கொள்ளலாம் (உதாரணத்திற்கு, டோஸ்ட், ஜாம், பழம், தண்ணீர்) மற்றும் பரிசோதனைக்கு 1 மணிநேரம் முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது.
  2. பரிசோதனைக்கு 24 மணிநேரம் முன்பு அனைத்து காபின் பானங்களையும் தவிர்க்கவும். இது காபி, டீ, காபின் நீக்கப்பட்ட காபி/டீ, பாப், சாக்லேட், டைலினால் 2 மற்றும் 3 மற்றும்/அல்லது காபின் அடங்கிய மருந்துகளை உள்ளடக்குகிறது.
  3. இன்சுலின் மருந்தைச் சார்ந்திருக்கும் நீரிழிவு நோயாளிகள், தங்களின் இன்சுலின் மற்றும் குறைந்த அளவிலான உணவை பரிசோதனைக்கு 1 மணிநேரம் முன்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.
  4. தளர்வான ஆடைகளை அணிந்து வரவும் (உதாரணத்திற்கு, டி-ஷர்ட், டிராக் பேண்ட்கள், அத்லெடிக் ஷூக்கள் போன்ற)
  5. அனைத்து தற்போதைய மருந்துகளின் ஒரு பட்டியலை எடுத்து வரவும். எந்தவிதமான இதய மருந்துகளையும் நிறுத்த வேண்டுமா என்பது தொடர்பாக உங்கள் மருத்துவரிடம் கேட்கவும் (உதாரணத்திற்கு, மெட்ரோப்ரோலால் அல்லது அடினோலால் போன்ற பீட்டா தடுப்பிகள் மற்றும் டில்டியாசெம் அல்லது வெராபாமில் போன்ற கால்சியம் சேனல் தடுப்பிகள்).
  6. பரிசோதனைக்கு 48 மணிநேரங்கள் முன்பு, விறைப்புத் தன்மை குறைபாடு தொடர்பான மருந்துகளை எடுக்கக் கூடாது (உதாரணத்திற்கு, வயாகரா, சியாலிஸ், லெவிட்ரா போன்ற).

மையோகார்டியல் பெர்ஃப்யூஷன் இமேஜிங் 2 பகுதிகளைக் கொண்டது:

  1. ஓய்வு பரிசோதனை – சுமார் 1.5-2 மணிநேரங்கள் எடுக்கும் மற்றும் ஓர் ஊசியைத் தொடர்ந்து இமேஜிங் நடைமுறை மேற்கொள்ளப்படும்.
  2. அழுத்தப் பரிசோதனை – சுமார் 2-2.5 மணிநேரங்கள் எடுக்கும் மற்றும் இதில் ஒரு அழுத்தச் சோதனை, ஊசியைத் தொடர்ந்து இமேஜிங் நடைமுறை மேற்கொள்ளப்படும்.

இதயவியல்

எக்கோகார்டியோகிராபி: டிரான்ஸ்டியூசரில் உள்ள ஜெல்லின் காரணமாக உங்கள் தோலின் மீது குளிர்ச்சியாக உணரலாம் மற்றும் டிரான்ஸ்டியூசரை உங்கள் நெஞ்சின் மீது வைக்கும்போது இலேசான அழுத்தத்தை உணரலாம்.

உடற்பயிற்சி அழுத்த சோதனை அல்லது ஸ்டிரெஸ் எக்கோகார்டியோகிராபி: பரிசோதனைக்கு 1 வாரத்திற்கு முன்பு விறைப்புத் தன்மை குறைபாட்டுக்கான மருந்துகளை நிறுத்தவும். அனைத்து தற்போதைய மருந்துகளின் ஒரு பட்டியலை எடுத்து வரவும். மென்மையான பாதப்பகுதி கொண்ட ஷூக்களையும், வசதியான ஆடைகளையும் அணிந்து வரவும்.

ஹோல்டர் மானிட்டரிங் அல்லது லூப்/கார்டியாக் ஈவென்ட் மானிட்டரிங்: உங்கள் நெஞ்சின் மீது எந்த கிரீம்/லோஷனையும் பயன்படுத்தியிருக்கக் கூடாது. தளர்வான வசதியான உடைகளை அணிந்து வரவும். அனைத்து தற்போதைய மருந்துகளின் ஒரு பட்டியலை எடுத்து வரவும். பதிவு செய்யும் காலகட்டத்தின் போது ஷவர்/குளிப்பது அனுமதிக்கப்படாது என்பதை நினைவில் கொள்ளவும்.

இரத்த அழுத்த கண்காணிப்பு: குட்டையான அல்லது தளர்வான கைகள் கொண்ட பிளவுஸ்/ஷர்ட்டை அணிந்து வரவும். உங்களின் அனைத்து தற்போதைய மருந்துகளின் ஒரு பட்டியலை எடுத்து வரவும்.

இதய சம்பந்தமான ஆலோசனை

உங்களது அனைத்து தற்போதைய மருந்துகளின் ஒரு பட்டியலை எடுத்து வரவும்.